திருச்சிமாவட்டம் தா.பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேன் ஆக வேலை பார்த்து வருபவர்கள் வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (31), தெற்கு தவளபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல்(35). இவர்கள் இருவரும் முசிறி அருகே உள்ள வாளசிராமணி கிராமத்தில் மின்கம்பங்கள் நடும் பணி முடித்து விட்டு இரவு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, லேசான தூரல் மழைப் பெய்துள்ளது. லேசாகப் பெய்த மழை பின், கனமழையாகப் பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த இருவரையும் திடீரென மின்னல் ஒன்று தாக்கியது.