திருவாரூர் அருகில் உள்ள ஒடம்போக்கியாற்றில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 4.10 கி.மீ தூரம் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் கொட்டாரக்குடி பகுதியிலுள்ள காட்டாற்றில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 6.29 கி.மீ தூரம் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியினை அரசு முதன்மை செயலரும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்த்துறை கணிப்பாய்வு அதிகாரி கே.கோபால் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு இடங்களில் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணிகளை பட்டியலிட்டார்.