தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'திருச்சியில் வாக்கு எண்ணிக்கை 241 சுற்றுகள்' - Trichy Collector

திருச்சி: மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 1) 241 சுற்றுகள் நடைபெறவுள்ளது என்று திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர்
திருச்சி மாவட்ட ஆட்சியர்

By

Published : May 1, 2021, 3:15 PM IST

திருச்சியிலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை (மே 1) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது,

'திருச்சியிலுள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி 3,292 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

  • திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லுாரியிலும்,
  • திருவெறும்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாரநாதன் பொறியியல் கல்லுாரியிலும்,
  • துறையூர், முசிறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் துறையூர் இமயம் கல்லுாரியிலும்,
  • மண்ணச்சநல்லுார், லால்குடி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 14 மேசைகள் போடப்பட்டுள்ளன.

மணப்பாறை 30 சுற்றுகள்
ஸ்ரீரங்கம் 32 சுற்றுகள்
திருச்சி மேற்கு 28 சுற்றுகள்
திருச்சி கிழக்கு 27 சுற்றுகள்
திருவெறும்பூர் 30 சுற்றுகள்
லால்குடி 22 சுற்றுகள்
மண்ணச்சநல்லுார் 25 சுற்றுகள்
முசிறி 24 சுற்றுகள்
துறையூர் 23 சுற்றுகள்

என மொத்தம் ஒன்பது சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை 241 சுற்றுகள் நடைபெறவுள்ளது' என்று திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details