தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

27 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - திருச்சி மாணவர்கள் சந்திப்பு

திருச்சி: 27 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Trichy

By

Published : Oct 21, 2019, 10:50 AM IST

திருச்சி பாலக்கரை எடத்தெருவில் பழைய கோவில் என்று அழைக்கப்படும் புனித ஜெபமாலை ஆலய நிர்வாகத்திற்கு சொந்தமான சேக்ஸ்பியர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1993ஆம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து தங்களது மாணவப் பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவில் பள்ளியின் முதல்வர் தனசெல்வி ஜெயராணி, ஓய்வு பெற்ற ஆசிரியைகள் வேணு பேபி, நீம்மி, கிருஷ்டி, பியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

27 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட மாணவ-மாணவியர்


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது குழந்தைகளுடனும், பெற்றோருடனும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த விழாவில் முன்னாள் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'அதிமுகவினர் தியானம் செய்ய ஜெயலலிதா சமாதி போதிமரம் அல்ல!'

ABOUT THE AUTHOR

...view details