திருச்சி மாவட்டம் உறையூரில், தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சஜூவா என்ற சிறுவனின் உலகச் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் அச்சிறுவன் முதலாவதாக 40 விநாடிகளில் ஐந்து கணக்குகளை முடித்தும், தொடர்ந்து இரண்டாவதாக உலக தலைவர்களான பிடல் காஸ்ட்ரோ, சாக்ரடீஸ், திருவள்ளுவர்,சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியார், விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன், ஆகியோரைப் பற்றி நான்கு நிமிடம் 36 வினாடிகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி உலகச் சாதனை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் புரிந்த சாதனைகள் சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்து உலகச் சாதனையாக அறிவிக்கப்பட்டது.