தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்ரீரங்கம் ராப்பத்து வைபவத்தின் இரண்டாம் நாள் உற்சவம்! - ஸ்ரீரங்கம் ராப்பத்து வைபவம்

ஸ்ரீரங்கம் ராப்பத்து வைபவத்தின் இரண்டாம் நாளான இன்று (டிச.26) உற்சவர் நம்பெருமாள் முத்துக் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

Srirangam second day festival
Srirangam second day festival

By

Published : Dec 26, 2020, 9:59 PM IST

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் பகல் பத்து வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று (டிச.25) அதிகாலை வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கியது. ராப்பத்து நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று(டிச.26) காலை 6 மணி முதல் 9 மணி வரை மூலவர் ரங்கநாத பெருமாள் முத்தங்கி சேவை தரிசனம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் ஆரியபட்டால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் பிற்பகல் 12 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் திறக்கப்பட்டது. அதேபோல் ஒரு மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது.

1 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் 2 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளினார்.

ராபத்து இரண்டாம் திருநாளில் நம்பெருமாள் முத்துக் கொண்டை, வைர அபயஹஸ்தம் , பவள மாலை மற்றும் திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 9 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரங்கநாதரின் முத்தங்கி சேவையையும், உற்சவர் நம்பெருமாள் சேவையையும் தரிசித்தனர்.

இதையும் படிங்க: 2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details