திருச்சி: 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்.இக்கோயில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம் - Srirangam Ranganathan temple
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, மேலாளர் உமா , கண்காணிப்பாளர் வேல்முருகன், திருக்கோயில் பணியாளர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்று காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.