திருவிடைமருதூர் பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக தஞ்சையில் நேற்று சோதனை நடத்தியதில் கிடைத்த சில ஆதாரங்களின் அடிப்படையில் இன்று காலை திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பிஎஃப்ஐ) அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இதற்காக கேரளாவில் இருந்து தேசியப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று காலை திருச்சி வந்தனர். பாலக்கரை பிரதான சாலையில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகம் அமைந்துள்ள கட்டிடங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்க காவல்துறையினர் உத்தரவிட்டனர்.
பிஎஃப்ஐ அலுவலகத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அதிரடி சோதனை! - பாமக பிரமுகர் ராமலிங்கம்
திருச்சி: தஞ்சை திருவிடைமருதூர் பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பிஎஃப்ஐ அலுவலகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிரடி சோதனை!
கேரளாவிலிருந்து வந்த நான்கு அதிகாரிகள் காலை 9 மணி முதல் இச்சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த அமைப்பின் நிர்வாகிகள் நான்கு பேரை வரவழைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது. பிஎஃப்ஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதி இசுலாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இஸ்லாமியர்களின் வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிகளவில் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.