கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் சிலர் அத்துமீறி கூடுவது, வாகனங்களில் வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் முழுவதும் சிறிய சாலைகள், ஊரக பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் ட்ரோன் கேமராக்களை காவல்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் பரவலாக ட்ரோன் கேமிராக்கள் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.