தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பழுதடைந்த மின்மாற்றிகள் மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி - களத்தில் இருப்பதோ வேற நிலை..! - trichy district recent news

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே நல்லதங்காள் கோயில் அருகே உள்ள மின்மாற்றி பழுதாகி ஆபத்தான நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர். மேலும், ஆபத்தான நிலையில் இருக்கும் மின் மாற்றியை மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதடைந்த மின்மாற்றிகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Jan 24, 2022, 4:47 PM IST

Updated : Jan 24, 2022, 8:22 PM IST

திருச்சி: சில நாள்களுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் பழுதான நிலையில் உள்ள அனைத்து மின்மாற்றிகளும் திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே மாற்றும் பணி தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்றும்,

கிராமங்களில் மின்மாற்றி மாற்றாமல் உள்ளதாகக் கூறுவது தவறான தகவல் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், வளநாடு - நல்லதங்காள் ஆலயத்தின் அருகில் உள்ள மின்மாற்றியின் சிமென்ட் கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இடிந்து விழும் தருவாயில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருச்சி அருகே ஆபத்தான நிலையில் மின் மாற்றி

இந்தப் பழுதடைந்த மின்மாற்றிகளால், உயிர்ச் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து அவற்றை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கரோனா- பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா?

Last Updated : Jan 24, 2022, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details