நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முக்கொம்பு சுற்றுலாத்தலம் திறப்பு - trichy mukombu tourist
திருச்சி: ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த முக்கொம்பு சுற்றுலா மையம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
trichy mukombu tourist spot open
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு சுற்றுலா மையம் இன்று முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு பிறகு இது திறக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் மகிழ்ச்சியுடன் வருகை தந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்ட பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.