தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில்
மணப்பாறை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில் 2019-2020 ஆண்டிற்கான குடிமராமத்துப் பணி இன்று தொடங்கப்பட்டது.
மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 289க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய், குட்டைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதில் முதற்கட்டமாக பாப்பாங்குளம் என்னும் இலந்தை குளத்தில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் குளங்கள் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு, குடிமராமத்துப் பணியை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சந்திரசேகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் மனோகர்சிங், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கிஷன்சிங், ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மணப்பாறையில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்!