தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தொலைபேசிக்கு செவ்வாய்க்கிழமை (அக்.6) அழைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கூடுதல் சிறப்பு வழக்குரைஞர் சஞ்சய் காந்தி விழுப்புரம் மாவட்டக் குற்ற பிரிவில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரவீந்திரன் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள சிறுகளம்பூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கங்காதரன் (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக சிறுகளம்பூர் பகுதிக்கு சென்ற குற்றப்பிரிவு காவலர்கள் சுதாகரனை கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.