தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2019, 6:21 PM IST

ETV Bharat / city

"ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டாத போலீசார்" - லலிதா ஜூவல்லரி கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

திருச்சி: திருவாரூர் காவல் துறையினர் ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டவில்லை என்று லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ்
லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ்


திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை வாகனத்தில் உட்கார்ந்திருந்த சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது, 'தன் மீது பொய் வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளதாகவும், தனக்கு யாருமே கிடையாது என்றும் இது குறித்து நீதிபதியிடம் கூற முடியவில்லை என்றும்' கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'கொள்ளையடித்த நகைகளைக் கொடுத்து விட்டதாகவும் இன்னும் தங்களிடம் நகை இருக்கிறது என்று காவல் துறையினர் தொந்தரவு செய்வதாகவும்; பொய் வழக்குகளைப் பதிவு செய்து அதிகமாக நகைகளைக் கணக்கு காட்டுவதாகவும்; லலிதா ஜூவலல்லரியில் கொள்ளையடித்த நகைகளின் விபரம் சரியாக தெரியவில்லை' என்றும் தெரிவித்தார்.

லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ் அதிர்ச்சி தகவல்

மேலும் 'திருவாரூரில் காவல் துறையினரிடம் தான் நகை இருந்த பையை போட்டு விட்டு ஓடிய போது அந்த பையில் 5,700 கிராம் நகை இருந்ததாகவும்; ஆனால் 4800 கிராம் நகையை தான் காவல் துறையினர் கணக்குக் காட்டினர் என்றும்; இதை கூறினால் தன்னை அடிக்க வருவதாகவும்' பேசினார்.

இதையும் படிங்க:

சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவில் எலி; உத்தரப்பிரதேசத்தில் நடந்த அவலம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details