தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ” வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை ஏஜென்ட்டுகள் என சிலர் தவறாக சித்தரிக்கப் பார்க்கின்றனர்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். உடனே இரண்டு மடங்கு லாபத்துடன் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை. இதை நாங்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, எங்களை ஏமாற்றுவதற்காக புதிதாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.