தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இலை தழைகள் அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - அரசு செவி சாய்க்குமா? - Demonstration in Trichy on behalf of the Farmers Association

திருச்சி: விவசாயிகள் மேலாடை இன்றி ஆதிவாசிகளைப் போல் இலை தழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதிவாசிகளாய் ஆர்ப்பாட்டம்! அரசு செவி சாய்க்குமா?
ஆதிவாசிகளாய் ஆர்ப்பாட்டம்! அரசு செவி சாய்க்குமா?

By

Published : Aug 10, 2020, 6:43 PM IST

திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலாடையின்றி இலை தழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விவசாயிகள் சங்கம் சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம்

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய அளவிலான மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர் காப்பீட்டுத் தொகை: வேதனையில் விவசாயிகள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details