தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மிஸ்டர் தென்னிந்தியா பொறியியல் இளைஞர் வெற்றி - மிஸ்டர் தென்னிந்தியா அஜ்மீர் கான்

திருச்சி: தென்னிந்திய மாடலிங் போட்டியில் திருச்சி பொறியியல் இளைஞர் வெற்றிபெற்றுள்ளார்.

மிஸ்டர் தென்னிந்தியா
மிஸ்டர் தென்னிந்தியா

By

Published : Mar 7, 2020, 5:42 PM IST

தென்னிந்திய அளவிலான மிஸ்டர் மற்றும் மிஸ் மாடலிங் போட்டி கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய அளவிலிருந்து சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த அஜ்மீர் கான் (22) என்ற பொறியியல் பட்டதாரி கலந்துகொண்டார். மொத்தம் ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று அஜ்மீர் கான் வெற்றி பெற்றார்.

மிஸ்டர் தென்னிந்தியா அஜ்மீர் கான்

இதுகுறித்து திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று அஜ்மீர் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நான் இந்த வெற்றியை சாதாரணமாக பெறவில்லை. மிகவும் கடின உழைப்புக்குப் பின்னரே கிடைத்தது. எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். மிஸ்டர் இந்தியா பட்டம் வெல்வதே எனது இலக்காகும். உலக அளவில் இப்போட்டியில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். இதற்கு முன்பு மிஸ்டர் மதராசபட்டினம் போட்டியில் கலந்துகொண்டு சிறந்த இயற்கை அலங்காரத்திற்கான பரிசைப் பெற்றேன். அதேபோல் தமிழக ஸ்டைல் ஐகான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு ஃபேஷன் கோரியோகிராபர் பிரகாஷ் பிள்ளை பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார்” என்றார்.

இதையும் படிங்க:தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி: நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details