திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக்குழு கூட்டம் இன்று (மே30) நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர், தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரும் ஜூன் 3ஆம் தேதி 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் விழா'-வில் சிறப்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் கழகத்தின் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், என்.கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், செந்தில் மற்றும் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.