புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவர் 2008ஆம் ஆண்டு ஜேசிபி வாகனம் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இந்த வாகனத்திற்கு தற்காலிக பதிவு எண் வாங்குவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலக புரோக்கர் பிலால் என்பவர் மூலம் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அலுவலக கட்டணம் தவிர ரூ.750 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து செல்வி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் செல்வியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன், அலுவலக உதவியாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோரை கையும் களவுமாக காவல் துறையினர் பிடித்தனர்.