தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - திருச்சி கால்நடை சந்தை

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 10, 000 அபராதம் என கூறப்பட்டுள்ளது
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

By

Published : Nov 26, 2021, 2:19 PM IST

Updated : Nov 26, 2021, 2:56 PM IST

திருச்சி: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதனால் பல சமயங்களில் சாலை விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதனைத் தடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என அறிவித்துள்ளார்.

மேலும், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மூன்று நாள்களுக்குள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி திரும்பிப் பெற்றுக்கொள்ளாவிட்டால் பறிமுதல்செய்யப்பட்ட கால்நடைகள், கால்நடைச் சந்தையில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு!

Last Updated : Nov 26, 2021, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details