திருச்சி:திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதியான நிலையில், அதிருப்திக்கு அச்சாரம் போடப்பார்த்தார், ஸ்ரீரங்கம் பகுதிச்செயலாளர் ராம்குமார்.
திருச்சி காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் பகுதிச்செயலாளர் ராம்குமார், பணம் கட்டினார் என பெரும் சலசலப்பு கிளம்பிய நிலையில் கூட்டணி தொடருமா அல்லது கைகூடாதா என குழப்பத்தில் தவித்து வந்தவர்களுக்கு எண்டு கார்டு போட்டிருக்கிறது, காங்கிரஸ்.
வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான இன்று ஒருவழியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி,திமுக கூட்டணியில் 4 வார்டுகளே ஒதுக்கப்படும் என காங்கிரஸ் தொண்டர்கள் கூறிய நிலையில், கூடுதலாக ஒரு வார்டு ஒதுக்கி, மொத்தம் 5 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வார்டு எண் 1இல் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜவஹர், 24இல் விமலராணி சோபியா, 31இல் முன்னாள் மேயர் சுஜாதா, 39இல் திருநாவுக்கரசர் பி.ஏ. ரெக்ஸ், 41இல் தெற்கு மாவட்டச்செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.