திருச்சி மாநகராட்சியின் கோ- அபிசேகபுரம் கோட்டம், தில்லை நகர் சாஸ்திரி ரோடு, ஹவுசிங் யூனிட் பகுதி, கீரக்கொல்லைத் தெரு, டாக்கர் ரோடு, காளையன் தெரு ஆகியப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்களது வீடுகளில், உள்ள குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதையும், மட்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் பணியையும் மேற்கொள்கின்றனர். இது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் அப்பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது ஆணையர் கூறுகையில், 'திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் 214 சிறிய வாகனங்களைக் கொண்டு, வீடுகள் தோறும் மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும்; பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குகிறார்களா என்றும்; மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் பணியை மேற்கொள்கிறார்களா என்றும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார்.