திருச்சி:திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கிருபாகரன் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ராம்ஜி நகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த இளைஞரின் தாய் அவரைத் தேடி வந்துள்ளார்.
அப்பொழுது கொத்தமங்கலம் பகுதியைச்சேர்ந்த வீர முத்தரையர் முன்னேற்ற சங்கப்பொறுப்பாளரான சுந்தர் என்பவர் கிருபாகரனின் தாயுடன் ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லவே தான் வந்ததாக சுந்தர் கூறுகிறார்.
அப்பொழுது ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், 'சுந்தரிடம் நீ எப்படி இங்கு வரலாம்' என்று கேட்டு சாதி பெயரை கூறி தள்ளிவிட்டதாகவும், இதில் சுந்தருக்கு தலையில் அடிபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சாதிப்பெயரை கூறி வீர முத்தரையர் முன்னேற்ற சங்க பொறுப்பாளரை தாக்கிய காவலர்!- திருச்சியில் பரபரப்பு இந்த சம்பவத்தை அறிந்த வீரமுத்தரையர் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து ராம்ஜி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் ஆய்வாளர் விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் காவலரை ஒருமையில் அழைத்த அவர்கள் காவலரின் சாதியை கேட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ஹனுமன் சாலிஸா சர்ச்சை; ராணா தம்பதியருக்கு பிணை!