திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி அருகே இந்திய ஓவர்சீஸ் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் எமிலிசோலா என்பவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு எமிலிசோலா மரணமடைந்தார். இதனால் அவரது வங்கிக் கணக்கு நீண்ட நாட்களாகப் பண பரிமாற்றம் இன்றி இருந்துள்ளது.
ஆனாலும் அவரது கணக்கில் ரூ. 25 லட்சம் பணம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாகப் பண பரிமாற்றம் இல்லாததால் வங்கி அலுவலர்கள் எமிலிசோலா கணக்கை முடக்கினர். இந்நிலையில் எமிலிசோலா கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு இறந்த தகவல் வங்கி நிர்வாகத்திற்குத் தெரியவந்துள்ளது. இதையறிந்த வங்கி மேலாளர் உறையூர் நாச்சிகுறிச்சியைச் சேர்ந்த ஷேக்மொய்தீன் (58) என்பவரும், உதவி மேலாளராக பணியாற்றிய சின்னதுரை என்பவரும் சேர்ந்து எமிலிசோலா கணக்கில் உள்ள பணத்தைக் கையாடல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.