தமிழ்நாடு

tamil nadu

குடியுரிமை திருத்தச் சட்டம் - இஸ்லாமியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

By

Published : Feb 26, 2020, 8:09 AM IST

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் அனைத்து இடங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், திருச்சியில் ஒன்பதாவது நாளாக இன்றும் இஸ்லாமியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த எட்டு தினங்களாக தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில் இரவு பகலாக, இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சி.எ.ஏக்கு எதிராக இஸ்லாமியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

ஆர்ப்பாட்டம், தர்ணா என தொடர்ந்த நிலையில், வாயில் துணியை கட்டி அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைவிட வேண்டும் என கோரிக்கைகயை வலியுறுத்திய இவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details