இது தொடர்பாக திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திருச்சி அரசு மருத்துவமனையில் 2018ஆம் ஆண்டு இருதய உள்துளை சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கப்பட்டது.
இங்கு முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஆஞ்சியோ, ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மாதத்திற்கு 10 ஆயிரம் வெளி நோயாளிகளும் மூன்றாயிரம் உள் நோயாளிகளும் இதன்மூலம் பயனடைந்துவருகின்றனர்.
நெஞ்சு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்பட்டால் ஆஞ்சியோகிராம் சிகிச்சைஅளிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வரையிலான ஓராண்டில் ஆயிரம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி அரசு மருத்துவமனையில் முற்றிலும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது“ என்றார்.
ஒரே ஆண்டில் 1,000 ஆஞ்சியோகிராம் சிகிச்சை - அரசு மருத்துவர்கள் சாதனை இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலா, கொரோனா வைரஸா? - சேலத்தில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை