தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணம் தர மறுத்த இளைஞரின் மண்டையை உடைத்து திருநங்கைகள் அட்டகாசம்! - latest news in trichy

திருச்சி: பணம் தர மறுத்த இளைஞரை, பேருந்து நிலையத்தில் வைத்து திருநங்கைகள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கைகள் அட்டகாசம்

By

Published : Oct 7, 2019, 12:05 PM IST

திருச்சி மாவட்டம் சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் உஸ்மான் அலி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் திருநங்கைகள் உஸ்மானிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் தர உஸ்மான் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் ஒன்று கூடி உஸ்மான் அலியை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

எனினும் திருநங்கைகள் கும்பல் உஸ்மானை பொதுமக்கள் மத்தியில் கும்மியடித்தும் கைத்தட்டியும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவமதிப்பு செய்துள்ளனர். இதைச் சுற்றியிருந்த பயணிகள் பலர் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது அங்கு வேடிக்கை பார்த்தவர்களைக் கண்டு உஸ்மான், “தவறுகள் நடந்தால், தட்டிக் கேட்க மாட்டீர்களா?” என்று கோபத்தில் வினவியுள்ளார்.

உஸ்மானின் மண்டை உடையும்வரை கண்டுகொள்ளாமல் இருந்த கூட்டத்தில் இருந்தவர்கள், உஸ்மான் கோபத்தில் கேட்ட கேள்விக்கு மட்டும், “நீ எப்படி எங்களைப் பேச முடியும்” எனக் கூடியிருந்தவர்களில் ஒரு மிடுக்கானவர் முறைத்துள்ளார். மேலும், உஸ்மானை காவல்நிலையம் அழைத்த திருநங்கைகள், “வா, எங்கள் சேலையை பிடித்து இழுத்ததாக உன் மீது வழக்கு தொடுப்போம்” என மிரட்டியுள்ளனர்.

பிரபல காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்!

இந்தக் காட்சிகளைப் பயணி ஒருவர் தனது கைப்பேசியில் படம்பிடித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாகத் திருச்சி கன்டோன்மென்ட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கடைவீதிகள், போக்குவரத்து சிக்னல்களில் திருநங்கைகளின் அட்டகாசம் இது போல் அதிகரித்துள்ளது.

திருநங்கைகள் அட்டகாசம் செய்யும் காணொலி

இதைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையத்தில் முழு அலங்காரத்துடன் ஆண்களைப் பாலியல் தொழிலுக்கு ஒதுக்குப்புறமான இடங்களுக்கு அழைத்துச் சென்று, அடித்து உதைத்து நகை, பணம், கைப்பேசிகளைப் பறிக்கும் சம்பங்களும் அரங்கேறிவருகிறது.

'சோனியா காந்திக்கு பிறப்புச் சான்றிதழ் நான் தருகிறேன்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

இச்சம்பவம் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று, பலரும் காவல் நிலையத்தில் புகாரளிக்க முன்வருவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு திருநங்கைகள், இத்தகைய அட்டகாசத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details