திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்தா. திருநங்கையான இவர் பட்டப்படிப்பு படித்தவர். இவர் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கேட்டு மனு அளித்துள்ளார். எனினும் வேலை வழங்கப்படவில்லை. இந்த சூழலில் நேற்று (நவ.18) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி! - திருநங்கை தீக்குளிக்க முயற்சி!
திருச்சிராப்பள்ளி: அரசு வேலை கிடைக்காத விரக்தியில் திருநங்கை ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அஜித்தா, தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைகண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக அஜித்தாவை தடுத்து நிறுத்தி மீட்டனர். அதன்பின் அஜித்தாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இரு வாரங்களுக்கு முன்பு நிலப் பிரச்னையில் காவல்துறையினரைக் கண்டித்து தாயும், மகளும் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். குறைதீர் கூட்டங்களில் இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் கடுமையான சோதனைக்குப் பின்னரே ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை அனுமதித்து வருகின்றனர்.