தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து - தரமற்ற தலைக்கவசத்தால்  வியாபாரி உயிரிழப்பு

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் அணிந்து சென்ற தலைக்கவசம் உடைந்து நொறுங்கியது.

ச்ட்வ்ச்வ்
ச்ட்வ்ச்

By

Published : Aug 16, 2022, 12:38 PM IST

Updated : Aug 16, 2022, 1:04 PM IST

திருச்சி:மணப்பாறை காட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (48). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒளியமங்கலம் சந்தைக்கு பொரி மூட்டையோடு சென்றுள்ளார். அப்போது புதுகாலனி என்ற இடத்தில் எதிரே வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தரமற்ற தலைக்கவசத்தால் ஓட்டுனர் உயிரிழப்பு

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மணப்பாறை காவல்துறையினர் விரைந்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கார் ஓட்டுனர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் ரவிச்சந்திரன் (50) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது

மேலும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அணிந்திருந்த தரமற்ற தலைக்கவசம் விபத்தின் போது உடைந்து நொறுங்கியதாலே அவர் தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

ஜெயக்குமார் (48)

இதையும் படிங்க: பிரபல திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்

Last Updated : Aug 16, 2022, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details