புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி
ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி - 6 பேர் மீது வழக்குப்பதிவு - ponnamaravathy
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது தொடர்பாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்ற ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு கோயில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை,திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க வந்தன.
ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுத்த உலகம்பட்டி காவல்துறையினர், காளை உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர். எனினும், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.