திருச்சி: சிறுகனூரை அடுத்த எம்.ஆர். பாளையத்தில் செயல்பட்டுவரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது எட்டு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. அதில் நீண்ட காலமாக இந்த மறுவாழ்வு மையத்தில் இருக்கக் கூடிய ஆறு யானைகளுக்குத் தமிழ்நாடு அரசு பராமரிப்புச் செலவுக்காக நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது.
அதில் யானைகளுக்கான பச்சைத் தீவனங்கள் வழங்க 62 லட்சத்து 30 ஆயிரத்து 112 ரூபாயும், யானைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கும், மற்ற இதர பராமரிப்புக்கும் நான்கு லட்சத்து ஆறாயிரம் ரூபாயும், யானைகளின் மருத்துவச் செலவிற்கு இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 998 ரூபாயும் எனப் பல்வேறு செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.