தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்ச்சையைக்கிளப்பிய சூர்யா தேவி தற்கொலையா.. க்ளைமேக்ஸில் போலீஸாருக்கே ட்விஸ்ட் - திடீர் ட்விஸ்ட்டாக வீட்டில் தூங்கிய சூர்யா தேவி

தற்கொலை செய்து கொள்ளயிருப்பதாக காணொலி அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூர்யாதேவியை காப்பாற்ற காவல் துறையினர் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் தனது வீட்டு கட்டிலில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் தெரியவந்தது.

Tiktok celebrity Suriya Devi suicide attempt
Tiktok celebrity Suriya Devi suicide attempt

By

Published : Aug 25, 2021, 5:34 PM IST

திருச்சி: டிக்டாக் புகழ் பிரபலம் திருச்சி சூர்யா தேவி, தான் தற்கொலை செய்வதாக மதுரை மாநகர் அலுவலகத்திற்கு வீடியோ அனுப்பிவிட்டிருக்கிறார்.

அதில் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதனால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், தனது இரண்டு குழந்தைகளையும் சென்னை வளசரவாக்கத்தைச் சார்ந்த ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவரிடம் ஒப்படைக்குமாறும் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த மதுரை காவல் துறையினர், சூர்யா தேவி வசிக்கும் பகுதியைச் சார்ந்த மணப்பாறை டி.எஸ்.பிக்கு தகவல் அளித்தனர்.

சூர்யா தேவி

இதைத்தடுத்து நிறுத்த சூர்யா தேவி வசிக்கும் காந்திநகர்ப்பகுதி வீட்டிற்குச் சென்ற காவல் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

என்னவென்றால், தற்கொலைக்கு படுக்கறையிலுள்ள மின் விசிறியில் தூக்குப் போடுவதற்காக வேஷ்டியை கட்டி வைத்துவிட்டு, காவல் துறையினர் வீட்டிற்குள் பூட்டை உடைந்து நுழைந்ததுகூட தெரியாமல் அயற்சியில் சூர்யா தேவி குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

வீட்டில் குறட்டைவிட்டுக்கொண்டிருந்த சூர்யா தேவி

பின்னர் குழம்பிப்போன காவல் துறையினர், சூர்யா தேவியை எழுப்பி, அவரையும் அவரது மகளையும் பக்கத்து வீதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.

டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி

பொதுமக்களுக்கு கால நேரம் இன்றி, பணியாற்றும் காவல் துறையினரை சூர்யாதேவி அலைக்கழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

இதையும் படிங்க: 'டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை கைது செய்ய வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details