திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலா என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
கோயிலில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களிலும் அகிலா கலந்துகொள்ளும். பொதுவாக யானைகளுக்கு குளிப்பது என்றால் அலாதி பிரியம். தண்ணீரை பார்த்துவிட்டால் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிடும்.
திருவானைக்காவலில் புதிய குளியல் தொட்டியில் குளித்து மகிழ்ந்த அகிலா யானை - Thiruvanaikaval Jambukeswarar Temple
திருவானைக்காவலில் புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் கோயில் யானை அகிலா குளித்து மகிழ்ந்தது.
இந்த வகையில் ஸ்ரீரங்கம் கோயில் யானைக்கு ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவுக்கு புதிதாக குளியல் தொட்டி அமைக்கப்பட்டது.
கோயில் வளாகத்தில் நாச்சியார் தோட்டம் அருகே 20 அடி நீளம் 20 அடி அகலத்தில் புதிதாக குளியல் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று இந்தக் குளியல் தொட்டியில் நீர் நிரப்பிய நிலையில், முதல்முதலாக யானை அகிலா குளித்தது. புதியமுறையில் குளிப்பதை அகிலா யானை ஆனந்தத்துடன் அனுபவித்து குளித்தது.