திருச்சிராப்பள்ளி:புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தாக்கம்: திருச்சியில் 72 பேர் பூரண குணமடைந்தனர்! - திருச்சி கரோனா
திருச்சியில் இன்று (அக்டோபர் 16) புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 389 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 191ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்தனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்து 529 ஆகும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 723ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 644 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 72 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 10ஆயிரத்து 912 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அதன் எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது.