திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், தாத்தையங்கார்பேட்டை, வையம்பட்டி, மருங்காபுரி, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, துறையூர், உப்பிலியாபுரம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 14 ஒன்றியங்களிலும் திமுக உறுப்பினர்களே அதிகம் வெற்றி பெற்றனர். இதேபோல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான 24 இடங்களில் 19 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. 5 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் 3ஆவது வார்டில் வெற்றி பெற்ற தர்ம ராஜேந்திரன் ஒருமனதாக திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை ஆட்சியர் சிவராசு வழங்கினார். இதேபோல் அந்தந்த ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வென்றது. அதன்படி...
ஒன்றியத் தலைவர் | துணைத் தலைவர் | |
அந்தநல்லூர் | துரைராஜ் | வனிதா |
மணிகண்டம் | கமலம் கருப்பையா | புவனேஸ்வரி |
திருவெறும்பூர் | சத்யா | சண்முகம் |
தாத்தையங்கார்பேட்டை | ஷர்மிளா | மல்லிகா |
வையம்பட்டி | குணசீலன் | ஸ்ரீவித்யா |
மருங்காபுரி | பழனியாண்டி | சரோஜா |
முசிறி | மாலா | ரமேஷ் பாபு |
மண்ணச்சநல்லூர் | ஸ்ரீதர் | செந்தில்குமார் |
லால்குடி | ரவிச்சந்திரன் | முத்துச் செழியன் |
புள்ளம்பாடி | ரஸியா | கனகராஜ் |
துறையூர் | சரண்யா | புவனேஸ்வரி |
உப்பிலியாபுரம் | ஹேமலதா | கலைச்செல்வி |
தொட்டியம் | புனிதா ராணி | சத்தியமூர்த்தி |
மணப்பாறை | அமிர்தவல்லி | ------------ |