தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மினிலாரி டயர் வெடித்து இருவர் பலி! - டயர் வெடித்து 2பேர் பலி

திருச்சி: முசிறி அருகே மினிலாரியின் டயர் வெடித்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

tyre

By

Published : Aug 19, 2019, 2:19 AM IST

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் (மினிலாரி) மூலம் எஸ்.புதூர் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்றனர். அப்போது, திருமானூர் கிராமத்தின் அருகே வந்தபோது வாகனத்தின் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்தது.

கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் போது

இதனால் வாகனத்திற்குள் இருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்தில் பேரூரைச் சேர்ந்த குணசீலன் (75), குமாரத்தி (52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து துறையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details