தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பள்ளிகளில் ஆய்வு

திருச்சி: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நிர்மல் ராஜ் திருச்சியிலுள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல் ராஜ் பள்ளிகளில் ஆய்வு
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல் ராஜ் பள்ளிகளில் ஆய்வு

By

Published : Jan 18, 2021, 9:40 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை(ஜனவரி 19) திறக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால், பள்ளிகள் தயார் நிலையில் உள்ளதா? என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நிர்மல்ராஜ் திருச்சி கேம்பியன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் ராஜ், 'தமிழ்நாடு முழுவதும் 4 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 506 பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்து கை, கால்களை சோப்புப்போட்டுக் கழுவி, முகக்கவசம் அணிந்து உள்ளே அனுமதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் கூடிய முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளுக்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, தொடர்ந்து பள்ளிகளைக் கண்காணித்து வருவார்கள். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க:பேராசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்- ஆசிரியர் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details