திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்.25) ஒரேநாளில் 107 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 838 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று (செப்.25) ஒரேநாளில் 118 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருச்சி,தஞ்சையில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா தொற்று - தஞ்சை மாவட்ட செய்திகள்
நாளுக்குநாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திருச்சி ,தஞ்சை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 114 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. தற்போது மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உள்ளது. 827 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல்,தஞ்சையில் இன்று (செப்.25) ஒரேநாளில் 150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 181பேர் கரோனா தொற்று பாதிப்படைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 1,328 நபர்களாகவும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 161 ஆகவும் உள்ளது. இன்று (செப்.25) ஒரேநாளில் 169 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.