தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராகுல்காந்தி பிறந்த நாள் - மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி - மரக்கன்றுகள் நடுதல்

திருச்சி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செயதல், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tamil Nadu Congress party members
Tamil Nadu Congress party members

By

Published : Jun 19, 2020, 5:24 PM IST

திருச்சி தென்னூர், அண்ணா நகர் உழவர் சந்தை பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரின் அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமில் 50 பேர் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர்.

மேலும் கரியமாணிக்கம் தேவிமங்கலம், திருச்சி காஜா மியான் பள்ளி உள்ளிட்ட ஐந்து இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் இந்த மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ”ராகுல் காந்தியின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிறந்த நாளை விழாவாகக் கொண்டாட வேண்டாம் என்று ராகுல்காந்தி அறிவுறுத்தியதன் அடிப்படையில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அவரது பிறந்தநாளை விவசாயிகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு கிலோ விதை நெல் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இன்று(ஜூன் 19) ஐந்து இடங்களில் தலா 50 மரக்கன்றுகள் என்ற அடிப்படையில் 250 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். இதனை தன்னார்வலர்கள், காங்கிரஸ் கட்சியினர், ரோட்டரி, லயன்ஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து இந்த மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நன்றாக மரங்களை வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று நிவாரணமாக கடந்த மார்ச் 27ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் 42 பகுதிகளைச் சேர்ந்த 11 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் எம்.பி.திருநாவுக்கரசரின் சார்பில்வழங்கப்பட்டுள்ளன. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு மரக் கன்றுகள் நடப்படுகிறது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details