தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றுத் திறனாளியின் இறப்பில் சந்தேகம்: உடலை விட்டுச் சென்ற உறவினர்கள்! - மணப்பாறை மாற்றுத் திறனாளி இறப்பு

மாற்றுத் திறனாளியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஒரு தரப்பு உறவினர்கள் புகார் அளித்ததால், அவரைப் பராமரித்து வந்த அவரது அத்தை உடலை தகனம் செய்யாமல் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சந்தேகம் என பேசிக் கொள்ளாத பெரியப்பா
சந்தேகம் என பேசிக் கொள்ளாத பெரியப்பா

By

Published : Nov 18, 2021, 2:00 PM IST

திருச்சி:மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு வடக்கு களம் பகுதியைச் சேர்ந்த பொன்னன் என்பவரின் மகன் வெள்ளையன் (எ) சக்தி (31). இவர் ஓர் மாற்றுத்திறனாளி. வெள்ளையனின் பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் அவரது தாய் மாமனின் மனைவி மஞ்சுளா கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (நவ.16) முன்தினம் இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வெள்ளையன் அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை நேற்று (நவ.17) அவரது அத்தை மஞ்சுளா மேற்கொண்டிருந்துள்ளார்.

அப்போது வெள்ளையனின் பெரியப்பா மகன் அன்பரசன், அவரது குடும்பத்தினர் வெள்ளையனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், வெள்ளையனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உடற்கூராய்வு முடிந்து, அவரது உடல் பன்னாங்கொம்பு பகுதிக்கு அவசர ஊர்தியில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், வெள்ளையனின் உடலுக்கு மஞ்சுளா உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் இறுதி சடங்குகள் செய்ய மறுத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இறந்து போன வெள்ளையனின் குடும்பத்தினருடன் பேசிக் கொள்ளாமல் இருந்த அன்பரசனும், அவரது குடும்பத்தினரும் சொத்துக்காக பொய்யான புகார் அளித்துள்ளதாகக் கூறிய மஞ்சுளா தரப்பினர், அவசர ஊர்தியில் இருந்த உடலை வாங்காமல் சென்றுள்ளனர்.

இதனையடுத்து புகாரளித்த அன்பரசன் குடும்பத்தினரை வரவழைத்த காவல் துறையினர், அவர்களைக் கொண்டு வெள்ளையனுக்கு இறுதிச்சடங்கை செய்து முடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:கனமழை எதிரொலி: இந்த மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details