திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கண்ணையா தலைமை வகித்தார்.
மத்திய அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது -எஸ்ஆர்எம்யூ கண்ணையா குற்றச்சாட்டு! - பாஜக அரசு
திருச்சி: ஆளும் மத்திய அரசு மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக செயல்படுகிறது என எஸ்ஆர்எம்யூ மாநில பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய கண்ணையா, ’ரயில்வே துறையில் 100 நாள் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேஜஸ் ரயிலை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஐஆர்சிடிசி என்ற ஏஜென்சியிடம் ஒரு ரயிலை 60 கோடி ரூபாய்க்கு கொடுக்க உள்ளனர். இதனால் பயண கட்டணம் உயர்வது மட்டுமின்றி, 1947ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்து வழங்கப்படும் டிக்கெட்டிற்கான மானியம் ரத்தாகும்’ என்றார்.
மேலும் பேசிய அவர், ’ஆளும் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது’ என்று குற்றம்சாட்டினார்.