தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பகல்பத்து 5ஆம் நாள்: கவிரி மான் தொண்டாரை கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல்பத்து ஐந்தாம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாளுக்கு கவிரி மான் தொண்டாரை கொண்டை அலங்காரம் செய்யப்பட்டது.

temple
temple

By

Published : Dec 19, 2020, 9:17 AM IST

Updated : Dec 21, 2020, 6:13 AM IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. பகல்பத்து நிகழ்ச்சியின் 5 ஆம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாளை மூலஸ்தானத்தில் இருந்து தூக்கி வந்து அர்ஜுன மண்டபத்தில் வைத்தனர். அங்கு நம்பெருமாள் சிலைக்கு கவிரிமான் தொப்பாரை கொண்டை, விமான பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், ரத்தினலிங்க தோளா, முச்துச்சரம், பவள மாலை, காசு மாலை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அதனை வழிபட்டனர்.

அதேபோல், ஸ்ரீரங்கம் கோவில் மூலவரான ரங்கநாத பெருமாளுக்கு, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மூலவரையும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முத்தங்கி அலங்காரத்தில் கண்டு மகிழ்ந்து வழிபட்டனர்.

இதையும் படிங்க: பிராய்லர் கோழிகளின் தரத்தை மேம்படுத்த வியாபாரிகள் கோரிக்கை...!

Last Updated : Dec 21, 2020, 6:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details