தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் திருவிழா - கொடியேற்றத்தில் ஏராளமானோர் பங்கேற்பு! - சித்திரைத் திருவிழா

அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(மே 05) தொடங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் திருவிழா
திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் திருவிழா

By

Published : May 5, 2022, 5:09 PM IST

திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது, அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில். பிரசித்தி பெற்ற இத்திருத்தலம் திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(மே 05) தொடங்கியது.

முதல் நிகழ்வாக கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு கொடியேற்றப்பட்டது.

அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மஹா தீபாரதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள், அனைத்து கிராம பட்டையதாரர்கள் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று கேடயம் புறப்பாடும், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: 'மதுரை மீனாட்சி கோயில் இணை ஆணையர் பொறுப்பு துணை ஆணையராக நிலை மாற்றம்'

ABOUT THE AUTHOR

...view details