தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாயில்லா ஜீவன்களை வாழவைக்கும் ராஜா... யார் இவர்..? - சிறப்புத்தொகுப்பு! - தெரு நாய்களுக்கு உணவளிக்கும் பூ வியாபாரி ராஜா

திருச்சி மாவட்டத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு தினமும் பாசமுடன் உணவளிக்கும் பூ வியாபாரியான ராஜா என்பவரை பற்றி சிறு தொகுப்பைக் காணலாம்.

வாயில்லா ஜீவன்களை வாழவைக்கும் ராஜா
வாயில்லா ஜீவன்களை வாழவைக்கும் ராஜா

By

Published : Apr 20, 2022, 10:13 PM IST

திருச்சி:இரவு பத்து மணி, 'வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா' என்ற பாடல் காற்றைக்கிழித்துக்கொண்டு சன்னமாக அலைபேசியில் ஒலித்தது. அவ்வளவுதான்... ஒன்றன்பின் ஒன்றாக பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் வாலை ஆட்டிக்கொண்டு வரிசையாக வந்தன.

இந்தக் காட்சியை, இன்று நேற்றல்ல இருபத்து ஏழு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் காண்கின்றனர். இந்தச் சத்தத்துக்கு சொந்தக்காரர், தமிழ்நாட்டின் இதயமான திருச்சி மாநகரத்தைச் சேர்ந்த பூ வியாபாரியான ராஜா. இவர் தினமும் ஐந்துபடி பால் சாதமோ, தயிர் சாதமோ எடுத்துக்கொண்டு தன்னுடைய டூவீலரில் தெருவில் இருக்கும் தெருநாய்களுக்கு உணவளிக்கிறார்.

கேள்வி:அவரைக் கண்டு, எதனால் இந்த எண்ணம் எழுந்தது என இடைமறித்தோம்?

பதில்: 'சின்ன வயதில் நான் வளர்த்த நாய் ஒன்னு லாரியில அடிபட்டு செத்துடுச்சுங்க. அன்னைக்கு முடிவு பண்ணினேன். நாம இனிமே தனியா வளர்க்க வேண்டாம். தெருவில் இருக்குற நாய்களுக்கு உணவ அளிப்போம்னு. அன்னையில இருந்து போட்டுக்கிட்டு இருக்கேங்க. இதுக்கான வருமானத்துக்கு நான் பூ வியாபாரம் பார்க்குறேன். அதுல வர்ற லாபம். அக்கம் பக்கத்தில் இருக்குறவங்க ஆக்காத ரேஷன் அரிசியை தர்றாங்க.

வியாபாரத்துக்கு போயிட்டு வந்தவுடன் என் மனைவி, மூன்று குழந்தைகளும் இந்த சோற்றை ரெடி செஞ்சு வச்சுடுவாங்க. அடுக்கை கட்டிக்கிட்டு கிளம்பிடுவேங்க. வாயில்லா ஜீவன்க நம்ம வண்டியோட சத்தம் கேட்டாளே போதும் வரிசைகட்டி வர ஆரம்பிச்சுடும். அப்படியே தெரு தெருவா போயி போட்டுட்டு, அதுக்குப்பிறகு சாப்பிட்டுட்டு படுத்தாதாங்க நிம்மதியான தூக்கம் வரும்.

கேள்வி:இனிமே உன்னை இந்த ஏரியா பக்கமே பார்க்கக்கூடாதுனு என செல்லமாக திட்டுறாங்க சில பகுதி மக்கள் - இதுகுறித்து உங்கள் பார்வை?

வாயில்லா ஜீவன்களை வாழவைக்கும் ராஜா

பதில்: 'முதல்ல வச்சகண்ணு வாங்காம பார்த்தாங்க. அப்புறம் அவங்களால முடிஞ்சதை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சிலர் இப்பவும் நீ பேசாம வந்து கொட்டிட்டு போற. அதுங்க எங்க வீட்டுத் திண்ணைய அசிங்கம் பண்ணுது. அதனால, இனிமே உன்னைய இந்த ஏரியா பக்கம் பார்க்கக் கூடாதுனு மிரட்டுவாங்க. அட போயானு நான்பேசாம என் வேலையை பார்த்துகிட்டே இருக்கேங்க'

கேள்வி:பெண் குழந்தைகள் மூன்று இருக்கிறது. உங்கள் சேமிப்பு சரியான அளவில் உள்ளதா?

பதில்: 'நல்ல கேள்வி கேட்டீங்க. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் சார். அந்த காலபைரவர் கண்டிப்பா கைவிடமாட்டார். நீங்க பார்ப்பீங்க சார்' என்றார்.

'பெயர் மட்டும் ராஜா இல்லைங்க மனசும்தான்' என வாழ்த்தி விடைபெற்றோம்!

இதையும் படிங்க:'என்னது.. அழகர் மதுரைக்குள்ள வந்தாரா..?' - அழகரின் ஆயிரமாண்டு வரலாறும் வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு தொகுப்பும்

ABOUT THE AUTHOR

...view details