திருச்சி:மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமையில் மக்களை தேடி மனுநீதி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.
தனியார் மண்டபத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மண்டப வளாகத்திற்குள் நுழைந்த அமைச்சர்களின் காரை சூழ்ந்து தங்களின் மனுக்களை அமைச்சர் கையிலே கொடுத்து விட வேண்டும் என்று அனைவரும் அவரை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ஒருவழியாக அரங்கத்தின் மேடைக்கு வந்து சேர்ந்த அமைச்சர்கள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்க தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், “மணப்பாறை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.