தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - SDPI Party protest

திருச்சி: மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDPI Party protest Against Central Government
SDPI Party protest Against Central Government

By

Published : Aug 28, 2020, 6:19 PM IST

Updated : Aug 28, 2020, 6:39 PM IST

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தம் ஆகியவை குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என தெரிவித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில், கடந்த 25ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை பரப்புரை இயக்கம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், இன்று திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா பகுதியில் கட்சியின் மாவட்டத் தலைவர் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் நியமத்துல்லா, மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், மத்திய அரசு இந்தச் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தொடர்ந்து பல வகையான போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Last Updated : Aug 28, 2020, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details