தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

என்பிஆர்.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்... இல்லையேல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்போம்: எஸ்டிபிஐ - sdpi addressing press regarding npr caa issue

திருச்சி: என்.பிஆர்க்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும் என்று மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

sdpi addressing press regarding npr caa issue
sdpi addressing press regarding npr caa issue

By

Published : Mar 15, 2020, 7:23 PM IST

எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் சுங்கச் சாவடிப் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் பைஜி தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது தேசியத்தலைவர் பைஜி செய்தியாளரிடம் கூறுகையில், நாட்டில் கரோனா நோய்க் கிருமி தாக்குதல் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை அச்சப்படும் சூழல் நிலவுகிறது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தொழில்களும் மோசமான நிலையிலுள்ளது.

சந்தைகள் அடைக்கப்பட்டு சரக்குகள் தேங்கியுள்ளது. கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பரப்புரைகளை எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், பெட்ரோல் - டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திவருகிறது.

சிஐஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான மாநில கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சில மாநில கட்சிகள் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் துடிப்புடன் உள்ளது. நாடாளுமன்ற நிதிநிலை அமர்வின் போது, குடியரசு தலைவர் உரையிலேயே இச்சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக 4000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு நன்மை ஏதும் செய்யாமல் மக்களை தெருவில் இறங்கி போராட வைத்துள்ளது ஆளும் மத்திய அரசு.

இதைத்தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும் வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். .

எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுக்குழு கூட்டம்

எனினும் சிஏஏ என்பது சட்டம் ஆகிவிட்டது. அதனால் அதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றமுடியாது. ஆனால் என்பிஆர்.க்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இவை அனைத்தும் சட்டங்கள் கிடையாது. விதிமுறைகள் மட்டுமே.

ஏற்கனவே ராஜீவ்காந்தி படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் என்.பி.ஆர்க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details