திருச்சி மாவட்டம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் உருவப்படத்திற்கு, அன்பில் மகேஷ் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அன்பில் மகேஷ் கூறுகையில், ”நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.