தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன் - நேரலை சுஜித் மீட்பு பணி

சுஜித்தை மீட்கும் பணி

By

Published : Oct 27, 2019, 2:24 AM IST

Updated : Oct 28, 2019, 3:47 PM IST

15:14 October 28

  • போர்வெல் மூலம் துளையிடுவதில் முன்னேற்றம் என்று அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 
  • போர்வெல் மூலம் 85 அடி ஆழம் வரை துளையிட திட்டமிட்டுள்ளனர். 

15:11 October 28

  • நடுக்காட்டுப்பட்டியில் மழை நின்றுவிட்டதால் துளையிடும் பணி வேகம் எடுத்துள்ளது. 
  • குழந்தை சுஜித் சிக்கியுள்ள பகுதியில் மண் சரிவு எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

13:19 October 28

1,700 குதிரை திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. போர்வெல் மூலம் பாறைகள் துளையிட்ட பின்னர் ரிக் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

13:16 October 28

மணப்பாறையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

12:43 October 28

  • போர்வெல் மூலம் துளையிடுவதற்குச் சரியான பகுதியை குறியீடு செய்வதற்காக தீயணைப்பு துறை வீரர் உள்ளே இறங்கியுள்ளார். 
  • போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தற்போது தொடங்கவுள்ளது.  

12:42 October 28

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்து வருகிறார்.

12:31 October 28

ரிக் இயந்திரம் மூலம் தற்போது வரை துளையிட்டிருக்கும் 45 அடியை, தீயணைப்பு துறை வீரர் ஒருவர் ஏணியின் மூலம் உள்ளே சென்று சோதனை செய்யவுள்ளார். 

12:27 October 28

போர்வேல் இயந்திரம் மூலம் தொடர்ந்து துளையிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

12:23 October 28

புதுக்கோட்டை, திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடுகள் செய்து சுஜித்திற்காக பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். 

12:13 October 28

ரிக் இயந்திரம் இதுவரை 45 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் 35 அடியும், இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் துளையிட்டுள்ளது. 

12:11 October 28

குழந்தை சுஜித் நலமுடன் மீண்டு வர சேலம் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

12:08 October 28

இன்று மட்டுமே பழுது காரணமாக மூன்றாவது முறை துளையிடும் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. பழுது சரி செய்த பின்பு மீண்டும் பணி தொடரும். 

11:45 October 28

இயந்திரம் மூலம் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10:45 October 28

செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘எந்த சூழ்நிலையிலும் மீட்பு பணி கைவிடப்படமாட்டாது. இறுதிக்கட்டம் வரை மீட்பு பணி தொடரும்’ என்றார். 

10:02 October 28

தற்போது இயந்திரத்தில் உள்ள பிளேடு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

09:57 October 28

தற்போது இயந்திரத்தில் உள்ள பிளேடு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

09:49 October 28

ரிக் இயந்திரம் பழுதான நிலையில் தற்போது வேறு இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது. 

09:29 October 28

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், ரிக் இயந்திரம் மூலம் துளையிடுவதை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மீண்டும் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது அவசியம். எவ்வளவு சக்தி வாய்ந்த இயந்திரத்தைக் கொண்டு வந்தாலும் கடினமான பாறைகளில் துளையிடும் பணி பாதிக்கப்படுகிறது’ என்று கூறினார்.  

09:22 October 28

ரிக் இயந்திரத்தில் உள்ள பிளேடுகளை மாற்றிய பின் மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது.  

07:38 October 28

தற்காலிகமாக ட்ரில்லர் மூலம் குழி தோண்டும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பழுது காரணமாக பணியாளர்கள், அலுவலர்கள் தற்போது ட்ரில்லரை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

07:30 October 28

சுஜித்தை மீட்கும் பணி 60 மணி நேரத்தை கடந்து நான்காவது நாளாக தொடர்கிறது. சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 40 அடி குழி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் 35அடியும், இரண்டாவது ரிக் இயந்திரம் 5 அடியும் குழி தோண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

06:13 October 28

சுஜித்தை மீட்க கொண்டுவரப்பட்ட புதிய ரிக் இயந்திரம் 5 மணி நேரத்தில் 5 அடி மட்டுமே தோண்டியது. கடினமான பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரம் பழுதடைந்தது. தொடர்ந்து, ரிக் இயந்திரத்தின் பழுது சீரமைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கடினமான பாறைகளால் சுர்ஜித் மீட்பு பணி தாமதம் என தகவல் வெளியாகியுள்ளன.

05:32 October 28

குழி தோண்டி வரும் புதிய ரிக் இயந்திரம்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 58 மணி நேரத்தை தாண்டியது. மீட்பு குழுவைச் சேர்ந்த கண்ணதாசன், தீலிப்குமார், மணிகண்டன்  ஆகிய மூவரும் குழி தோண்டியபின் குழிக்குள் இறங்கி மீட்பு பணியை மேற்கொள்ளவார்கள். சுஜித் மீட்ட பிறகு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவினர் மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு  தாயார் நிலையில் உள்ளனர்.

03:59 October 28

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 58 மணி நேரத்தை தாண்டியது. மீட்பு குழுவைச் சேர்ந்த கண்ணதாசன், தீலிப்குமார், மணிகண்டன்  ஆகிய மூவரும் குழி தோண்டியபின் குழிக்குள் இறங்கி மீட்பு பணியை மேற்கொள்ளவார்கள். சுஜித் மீட்ட பிறகு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவினர் மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு  தாயார் நிலையில் உள்ளனர்.

01:51 October 28

சுர்ஜித் மீட்புப் பணி குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு

புதிய ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணியை தொடங்கியது. இரண்டாவது ரிக் இயந்திரத்தின் விசைத் திறன் மூன்று மடங்கு அதிகம். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆ.பி. உஅதயகுமார், எம்.ஆர் விஜய பாஸ்கர், வெல்ல மண்டி நடராஜன் உள்ளிட்டோரும் குழி தோண்டும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

01:09 October 28

மீட்புப் பணிகள் குறித்துப் பார்வையிடத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளார். மீட்புப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

23:44 October 27

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமீமுன் அன்சாரி மீட்புப் பணிகள் குறித்துப் பார்வையிடச் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.

23:03 October 27

பழைய ரிக் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பழுது 15 நிமிடங்களில் சரி செய்யப்பட்டுவிட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

22:09 October 27

பழைய ரிக் இயந்திரத்தில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், புதிய இயந்திரம் செயல்பாட்டுக்கு வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

21:38 October 27

நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், "இரண்டு வயதுக் குழந்தை சுஜித் நிச்சியமாக உயிருடன் மீட்கப்படுவார் என்று அனைவருடன் சேர்த்து  நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இது ஒரு வேதனையான நிகழ்வு." என்று கூறியுள்ளார்.

21:29 October 27

நடிகர் சத்தியராஜ் வெளியிட்டுள்ள வீடியோ

13 மணி நேரமாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் ரிக் இயந்திரத்தின் பற்கள் எளிதில் தேய்ந்துவிடுகிறது. தற்போது வரை 40 அடிகள் மட்டுமே துளையிடப்பட்டுள்ளது.

20:52 October 27

நடுக்காட்டுப்பட்டி பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் மழை பெய்தாலும் ஆழ்துளைக் கிணற்றில் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20:35 October 27

சிறுவனை மீட்கும் பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்தாலும் வேடிக்கை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தினால் அப்பகுதியில் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரும் அவர்களை முடிந்தவரைக் கலைந்து செல்லும்படி அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் யாரும் கேட்பதாக இல்லை. மேலும், அதிகபடியான மொபைல்போன்கள் இந்த கிராமத்தில் தற்போது இயங்குவதால் நெட்வொர்க் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய தகவல்களைப் பரிமாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

19:48 October 27

வேடிக்கை பார்க்க வரும் மக்களால் அவதி

நடுக்காட்டுப்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை மட்டுமே பெய்துவருகிறது. இதனால் மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்றுவருகிறது. திருச்சியில் நிலவும் வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருவதாகவும் இரவில் மழை பெய்ய 50 விழுக்காடு வரை வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

19:19 October 27

தற்போது வந்துள்ள புது ரிக் இயந்திரத்தை தயார் செய்ய இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்றும், அதைக்கொண்டு 6 மணி நேரத்தில் 90 அடிகள் துளையிட முடியும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பழைய ரிக் இயந்திரத்தில் 35 அடிகளைத் தாண்டி துளையிடும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

18:47 October 27

சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே செல்ல ஏழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 90 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதும், இரு வீரர்களை உள்ளே அனுப்பத் திட்டம்.

17:59 October 27

நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்றுவரும் குழந்தையின் மீட்புப் பணிகள் குறித்துப் பார்வையிடச் சம்ப இடத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உயதகுமார் வருகை தந்துள்ளார்.

17:30 October 27

நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த  எம்.பி. திருமாளவளவன், "ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்களில் இதுவே கடைசியாக இருக்கட்டும். இதுபோன்ற சம்பவம் இனி இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்கக் கூடாது. செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது'' எனக் கேள்வியெழுப்பினார். மேலும் ஆழ்துளைக் கிணறுகள் பிரச்சனைகள் குறித்து கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றார்.

17:07 October 27

திருமா செய்தியாளர் சந்திப்பு

சிறுவன் சுஜித்தின் மீட்புப் பணிகளைப் பார்வையிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். அவர் மீட்புப் பணிகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்த பின் சுஜித்தின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

16:42 October 27

பெற்றோர்களுக்கு திருமாவளவன் ஆறுதல்

சிறுவன் சுஜித்தை மீட்க ராமநாதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டியை வந்தடைந்துள்ளது. இந்த புதிய ரிக் இயந்திரம் தற்போதுள்ள இயந்திரத்தைவிட மூன்று மடங்கு வேகத்தில் பாறையைத் துளைக்கும் தன்மையுடையதாகும். 

16:27 October 27

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடே தீபாவளியைக்கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுஜித் என்ற குழந்தையை மீட்க காலத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தையைக் கூடிய விரைவில் மீட்டு அவர்களின் பெற்றோர்களுடன் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்

16:04 October 27

குழந்தை சிக்கியிருக்கும் குழியில் 40 அடிவரை பாறைகள் இருப்பதாலும் மண் சரிவு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் குழி தோண்டும் பணி மெதுவாக நடைபெற்று வருகிறது.

15:28 October 27

குழி தோண்டும் பணி

சுஜித்தின் மீட்புப் பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு, தற்போது 25 அடி குழி தோண்டியுள்ள நிலையில் பாறைகள் தென்படுவதால் குழி தோண்டும் பணி தாமதமாகிறது. மேலும் இந்த பாறை 40 அடிவரை உள்ளதால் குழி தோண்டும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

குழி தோண்டும் அதிர்வால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணியை மெதுவாக நடத்திவருவதாகத் தெரிவித்த அவர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் கொண்டு வந்த தெர்மல் கேமராவில் நேற்று 4 மணியளவில் சுஜித் மயக்கநிலையில் இருப்பது தெரியவந்ததாகவும், உயிருக்கு பாதிப்பு இல்லையென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்தப் பணி முடிவடைய இன்னும் 5 மணிநேரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

14:05 October 27

ஆழ்துளை கிணற்றிற்கு அருகே குழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சுஜித்தை மீட்பதற்காக ஏழு பேர் கொண்ட தீயணைப்புத் துறை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

14:05 October 27

27 அடி ஆழத்தை எட்டிய புதிய ஆழ்துளை கிணறு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்பதற்கு தமிழ்நாடு தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது. இதில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்த நகைமுகன் உள்ளே இறங்கப்போவதாகவும் அவருடன் மீதமுள்ள ஆறு பேரில் யாரேனும் ஒருவர் உதவிக்கு செல்ல இருப்பதாகவும் தீயணைப்புத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

11:30 October 27

சுர்ஜித்தின் மீட்புப் பணி குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் நான்கு பேரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் பள்ளத்தில் இறங்கலாம் என்றும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அவர்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மணிகண்டன் என்பவர் பள்ளத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

09:14 October 27

தயார் நிலையில் உள்ள வீரர்கள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை தற்போது துளிர்த்துள்ளது.
 

08:41 October 27

குழிக்குள் இறங்க தயார் நிலையில் உள்ள நகைமுகன்


ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டும்  பள்ளத்தில்  தீயணைப்பு வீரர்கள் மூவர் இறங்கவுள்ளனர். அவர்கள், யாரென்று பள்ளம் தோண்டிய பிறகே முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

07:50 October 27


ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டும்  பள்ளத்தில்  தீயணைப்பு வீரர்கள் மூவர் இறங்கவுள்ளனர். அவர்கள், யாரென்று பள்ளம் தோண்டிய பிறகே முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

07:43 October 27

ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி மும்முரம்


ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டும்  பள்ளத்தில்  தீயணைப்பு வீரர்கள் மூவர் இறங்கவுள்ளனர். அவர்கள், யாரென்று பள்ளம் தோண்டிய பிறகே முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

07:20 October 27


ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டும்  பள்ளத்தில்  தீயணைப்பு வீரர்கள் மூவர் இறங்கவுள்ளனர். அவர்கள், யாரென்று பள்ளம் தோண்டிய பிறகே முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

07:01 October 27


குழந்தை சுஜித்தை மீட்பதற்கு மாற்று ஆழ்குழாய் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து மீட்புக்குழுவினரிடம்  அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சிவராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

06:46 October 27

ரிக்  இயந்திரத்துடன் டிரில்லரை பொருத்தும் பணி


குழந்தையை மீட்கும் இடத்தில் கட்டுவிரியன் பாம்பு  வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் யாரையும் அந்த பாம்பு தீண்டாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பாம்பை அடித்துக் கொன்றனர். 

06:28 October 27

ரிக் இயந்திரத்தின் பணி: ஆழ்துளைக் கிணற்றின் அருகே மூன்று  மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் புதிதாக பைல் பவுண்டேஷன் என்ற முறை மூலம் மற்றொரு ஆழ்துளைக் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணறுக்கு இணைப்பு ஏற்படுத்தி தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பு கவசங்களுடன் உள்ளே சென்று குழந்தை  மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் மீட்பு பணி முடிய 3 முதல் 4 மணி நேரம் ஆகும். 
 

05:09 October 27

குழந்தையை மீட்கும் இடத்தில் வந்த பாம்பு


ரிக் இயந்திரத்தின் உபரி பாகமான ட்ரில்லரை இயந்திரத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், நடுகாட்டுப்பட்டியில் இந்த நேரத்திலும்  பரபரப்பான சுழலே நிலவி வருகிறது. 

04:27 October 27


தற்காலிகமாக  ஆழ்துளைக் கிணற்றின் அருகே மேடு அமைக்கப்பட்டு, ரிக் இயந்திரத்தின் பணி தொடங்கியது. இன்னும் சில மணி நேரத்தில் சுர்ஜித் மீட்கப்படுவான் என்ற தன்னம்பிக்கை எழுந்துள்ளது. 

04:08 October 27

ரிக் இயந்திரம்

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 33 மணி நேரத்துக்கும் மேலான நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக்  இயந்திரத்தை சம்பவ இடத்தில் நிலை நிறுத்துவதற்கான பணி  விரைவாக நடைபெற்று வருகிறது.

03:30 October 27


இது போன்ற சம்பவங்கள் நமக்கு புதிதானது அல்ல. இதற்கு முன் ஆழ்துளை கிணறுகளில் விழுந்த எத்தனையோ குழந்தைகள் உயிரோடோ அல்லது இறந்தநிலையிலோ மீட்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய வேதனையும் பிரார்த்தனையும் தற்காலிகமாகவே இருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வுகளை காண முன்வருவதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வருமா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

03:09 October 27

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக்  இயந்திரம் சம்பவ இடத்திற்கு வந்தது.

ஐஐடி குழுவினரின் முயற்சியும் தோல்வியை தழுவிய நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தை அடையும் முன் குழந்தை சுஜித் 100 அடிக்கும் கீழே சென்றான். அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில் இறுதியாக போர்வெல் குழி அருகே ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

02:45 October 27

ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளின் பட்டியல்

மணிகண்டனின் முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், ஐஐடி குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தாங்கள் வடிவமைத்த நவீன கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஜேசிபி இயந்திரத்தை வைத்து தோண்டுவதால் ஏற்படும் அதிர்வுகளால் குழந்தை சுஜித், 68 அடிக்கும் கீழே சென்றான். 

02:15 October 27

மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தான் வடிவமைத்த பிரத்தியேக கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் கோவை, நாமக்கல் குழுவினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து தோண்டும் பணி தீவிரமானது. 

02:15 October 27

மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தான் வடிவமைத்த பிரத்தியேக கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் கோவை, நாமக்கல் குழுவினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து தோண்டும் பணி தீவிரமானது. 

02:14 October 27

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. 
தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

02:13 October 27

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. 
தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

01:18 October 27

SaveSujith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. 
தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

Last Updated : Oct 28, 2019, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details