தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் சுகாதார சீர்கேடு... அலுவலர்கள் அச்சம்... - Officers are afraid of dengue

திருச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டினால் அலுவலர்களுக்கு டெங்கு காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 2, 2022, 3:27 PM IST

திருச்சி: மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் செப்.29ஆம் தேதி மாலை நகராட்சி ஊழியர்கள் மூலம் கொசுமருந்து அடிக்கப்பட்டது. இதனால், அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அப்போது, அலுவலகத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்த அலுவலர்கள் அங்கு கழிவு நீர் தேங்கி இருந்ததையும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்ததனர். அதைத்தொடர்ந்து பின்புறமும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தினர்.

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் சுகாதார சீர்கேடு

இதனையடுத்து கட்டடத்தின் உட்புறமும், வெளிப்புறமும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொசு மருந்து புகை கட்டடத்திற்குள் இருந்து வெளியேறும் வரை அலுவலர்கள் வெளியில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் வேலை செய்கிற இடத்தில சுத்தமா இல்லாம இருக்கறதுனால கொசு கடிச்சு டெங்கு வந்திருமோன்னு பயமா இருக்கு, என்ன பண்றது என்று முனுமுனுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க:ஈபிஎஸ்சின் கனவை தகர்த்த உச்சநீதிமன்றம் - அதிமுகவில் அடுத்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details